\
FucherdPsychology

இந்த ஸ்டர்ஸ் ஆனா வாழ்க்கையில் சந்தோசமாக வாழ வழிகள் !

இந்த ஸ்டர்ஸ் ஆனா வாழ்க்கையில் சந்தோசமாக வாழ வழிகள் !

மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் எப்போதும் வெற்றி அடைவதற்கும் அவர்களுடை பழக்க வழக்கங்கள் முதன்மையாக காரணமாக அமைகிறது. என்ன தான் ஆடம்பரமான பழக்கவழக்கங்கள் உங்களின் குணநலன்களை உயர்த்திக் காட்டினாலும் நிச்சயம் அது நிரந்தம் இல்லை. இதனால் தான் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு சில பழக்க வழக்கங்களையும், குணநலன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள். இதோ இன்றைக்கு உங்களுக்காகவே மனிதர்களின் தங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதற்கான சில பழக்கங்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

நல்ல தூக்கம்:
தூக்கமும், ஓய்வும் மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. சரியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் அவர்களால் நாள் முழுவதும் எந்தவித பணிகளையும் செய்ய முடியாது. சொன்ன வேலையை செய்யமுடியவில்லை என்றாலும், ஏன் செய்யவில்லை? என பலர் கேள்வி எழுப்பி நம்மைத் திட்டினாலும் அங்கு மகிழ்ச்சி இருக்க வாய்ப்பில்லை. எனவே முடிந்தவரை இரவு 8 மணி நேரமாவது தூக்கத்தைக் கடைப்பிடியுங்கள். ஒருவேளை காலையில் பணியின் போது தூக்கம் வருவது போல் இருந்தாலும் குட்டி தூக்கம் போடுவது நல்லது.இது மட்டுமே நம்மை முலுமையாக திறன் பட செய்யும்.

ஆரோக்கியமான உணவு:
நோய் நொடியின்றி வாழ்ந்தாலே வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எனவே இன்றைக்கு பீட்சா, பர்கர் போன்ற உணவுகளைச் சாப்பிட்டாலும் அதற்கு பல மடங்கு அதிகமாக சிறு தானியங்களை உணவாக சாப்பிடுவது நல்லது. ஆரோக்கியமான உணவுகளைப் பின்பற்றினால் போதும். நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சுறுசுறுப்பாக இருத்தல்:
சோம்பேறித்தனம் ஒருவரின் வாழ்க்கையை முடக்கிவிடும். எனவே இதை விட்டு விட்டு வாழ்நாள் முழுவதும் பம்பரமாக சுற்றுங்கள். உங்களுக்கான வேலைகளை சோர்வின்றி செய்து முடியுங்கள். சரியான நேரத்தில் நீங்கள் எந்த வேலையைச் செய்து முடித்தாலும் வாழ்க்கையில் எவ்வித கவலையும் உங்களுக்கு ஏற்படாது. மனநிம்மதியுடன் இருக்க வேண்டும் என்றால் சுற்றுலா செல்லுங்கள். மேலும் காலையில் தியானம், யோகாசனம் போன்ற சிறிய உடற்பயிற்சிகளை செய்ய முயற்சி செய்யுங்கள்.

பணத்தைச் சேமித்தல்:
ஒவ்வொரு வீட்டிலும் ஆண் மற்றும் பெண்கள் இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் பணம் வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. பணம் இல்லையென்றால் மக்கள் மகிழ்ச்சியை இழந்துவிடுவார்கள். எனவே சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்வது என்பது குறித்து குறிப்பு எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் பணத்தை எப்படி சேமிப்பது? என்பது குறித்த வழி உங்களுக்குக் கிடைக்கும்.

கெட்ட நண்பர்களைத் தவிர்க்கவும்:
உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கச் செய்வது உங்களுடன் பழகும் சில நண்பர்களாக இருக்கக்கூடும். எனவே மனதில் கெட்ட எண்ணம் உள்ள நபர்களின் நட்புகளைத் தவிர்ப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us