\
FucherdSamayam

நாணயத்தின் மறுபக்கம்: பகுத்தறிவின் கண்களை மூடிய ஜாதி!

கோயில்களில் ஏன் சமஸ்கிருதம் பூஜை மொழியாக கொண்டு வரப்பட்டது?

சமஸ்கிருதம் என்பது ஒரு இசை மொழியாகும் அதன் வார்த்தைகள் எவையும் கூறும்பொழுது ஒரு இசை இசைப்பது போன்று இருக்கும் இந்த காரணத்தினால் மட்டுமே அந்த மொழியை கோவில் அர்ச்சனை செய்யக் கூடிய மொழியாக அதை கொணர்ந்தனர்.

இசை மொழிக்கும் பூஜைக்கும் என்ன சம்பந்தம்?

நம்மில் பலரும் நம்முடைய முன்னோர்கள் செய்தது ஒரு அறிவியல் என்று எண்ணாமல் அதை இன்றளவிலும் மூடநம்பிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகின் முதல் கோவில் கட்டக் கூடிய இடம் ஒரு பாசிட்டிவ் தன்மை நிறைந்த இடமாகவே இருக்கும் இது முழுக்க முழுக்க பாசிட்டிவ் மற்றும் நற்சிந்தனை விதைக்க வே ஏற்பட்ட ஒரு இடம்.

அதாவது நாம் இசையால் இறைவனை அடையலாம் என்பதே அந்த இசையின் உள்ள வைப்ரேஷன் தன்மையாகும் அந்த வைப்ரேஷன் மூலமாக நம்மிடம் இருந்து வெளிப்படும் செயலானது கோவிலில் உள்ள சிலை பிரதிபலிப்பில் பட்டு அது கோபுர உச்சியைத் சென்றடையும் இதன்நான் கூறக் கூடிய அனைத்து நல்ல வார்த்தைகளையும் நல்ல எண்ணங்களும் அந்த ஒரு அதிர்வு மூலமாக அந்த கருவறையை சென்றடைந்து கோபுரத்துக்கு செய்கின்றது.

இந்த காரணத்திற்காக மட்டுமே தான் இந்த மொழியில் கோவில் அர்ச்சனை செய்யப்படுகின்றது உண்மையை அறிய நினைப்பவர்கள் இரண்டு மொழிக்கும் உள்ள அதிர்வு அலை வித்தியாசத்தை உணரலாம்.

இந்த மொழிக்கு மட்டும்தான் இந்த தன்மை உண்டா?

இல்லை இந்த மொழிக்கு மட்டுமல்ல அரபு மொழிக்கும் இந்த தன்மை உள்ளது ஏனெனில் இரண்டு மொழிகளிலுமே வார்த்தைகளும் தடையின்றி ஒரு ஓசை மற்றும் அதிர்வின் மூலமாக செயல்படக்கூடிய வார்த்தைகளாகும்.

கோவிலில் பிராமணர் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டுமா?

முதலில் பிராமணன் என்பதே பிறப்பால் ஏற்படக்கூடிய ஒரு அர்த்தம் இல்லை ஒரு பிராமணன் என அர்த்தம்.

எவன் ஒருவன் மூன்று வேளையும் தன்னையும் சுத்தமாக்கிக் கொண்டு தனது மனதையும் சுத்த தன்மையோடு இறைவழிபாட்டில் இறங்கி இறைவனே கதி என்றும் அவனுக்கான சேவையை செய்ய எண்ணுபவன் மற்றும் சுய ஒழுக்கத்தாலும் சுய மேன்மையாலும் அனைவருக்கும் நன்மை செய்ய நினைப்பவன் ஆகும்.

இதுவே ஒரு பிராமண கூறிய பக்குவம் ஆகும் என்று ஆதிகாலம் முதலே பல முன்னோர்கள் கூறியுள்ளனர் அதன் அடிப்படையில் இன்றுவரை பிறப்பால் பிராமணர் அல்ல அது சமஸ்கிருதம் பயின்று பிராமண துவத்தை பின்பற்றும் மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பாடசாலைகள் உள்ளன.

இந்தப் பாடசாலையில் எவர் வேண்டுமானாலும் இங்கு சென்று வேத பாடங்களை கற்றுக் கொள்ளலாம் அப்பேர்பட்ட பாடசாலை பிள்ளையார்பட்டியில் உள்ள வேத பாடசாலை ஆகும்

https://www.pillaiyarpattitemple.com/index.html

இன்றளவும் உலகில் மலேஷியா ,ஸ்ரீலங்கா ,சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் பிறப்பால் ப்ரமாணன் அல்லாத பலரும் கோவிலில் வேதபாராயணம் செய்து பூஜை செய்கின்றார் .

இவ்வாறு பலதரப்பட்ட உண்மைகளை இன்றுவரை பலருக்குத் தெரியாமல் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றார் அதனால் தாங்கள் விழிப்புடன் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நிதர்சன உண்மையை அறிவிப்போம்.https://www.facebook.com/100009323038238/videos/2931125020541570/

https://www.facebook.com/100009323038238/videos/2931125020541570/

சிறந்த எடுத்துக்காட்டு இது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us