காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !

நம்முடைய உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க சில விஷயங்களைக் கட்டாயம் உங்களது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக காலை எழுந்ததும் சில விஷயங்களை முறையாக பின்பற்றினால் மட்டுமே நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு நல்ல ஆற்றலையும் பெற முடியும். உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க காலையில் அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் என்னென்ன என தெரிந்துக் கொள்வதற்கு ஆர்வமா? இதோ அவற்றில் சில உங்களுக்காக…
உடல் ஆரோக்கியமும் காலை பழக்க வழக்கங்களும்:
நீரேற்றத்துடன் இருத்தல்:
நாள் முழுவதும் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததும முழு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தலைவலி, உடல் சோர்வை அனுபவிக்க நேரிடும்.
உடற்பயிற்சி:
காலை எழுந்ததும் உடல் சோர்வின்றி இருக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சிகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். உங்களால் அதிக உடற்செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லையென்றால், லேசான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளவும். யோகா, ஜம்பிங், நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தியானம்:
உடலும் மனதும் அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், தினமும் 5-10 நிமிடங்கள் தியானம் மேற்கொள்ள வேண்டும். இதோடு ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளையும் மேற்கொள்ளவும்.
- முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !
- ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்
- காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !
- அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !
சத்தான காலை உணவுகள்:
ஒரு நாளில் மதியம் மற்றும் இரவு உணவைச் சாப்பிடுகிறோமோ? இல்லையோ? காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதிலும் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சத்தான காலை உணவை உட்கொள்ள வேண்டும். காலையில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு நாள் முழுவதும் சோர்வின்றி இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

சூரிய ஒளியில் நிற்பது:
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தான வைட்டமின் டி யை பெற வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
திரை நேரத்தை வரம்பிடுதல்:
காலையில் நம்மை அறியாமலே நமது உடலைச் சோர்வாக்குவது மொபைல் மற்றும் கம்யூட்டர் செயல்பாடுகள். நேரம் வீணாவதோடு உடலையும் சோர்வாக்கும். எனவே காலை எழுந்தவுடன் குறைந்தது 30 நிமிடங்களுக்கு போன் அல்லது கம்யூட்டர் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக செய்தித்தாள், புத்தகம் வாசிப்பைத் தொடங்குங்கள்.
இதுபோன்ற செயல்பாடுகளை உங்களது வாழ்க்கை முறைக்கு ஏற்ப கடைப்பிடிக்கவும். நிச்சயம் காலைப் பொழுதைப் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வைத்திருக்க உதவியாக இருக்கும். இனி மறக்காமல் இந்த பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
