\
FucherdHealth

Protein Rich Vegetarian: சைவ உணவுகளில் இருக்கும் அதிகப்படியான புரத உணவுகள் எது என்பதை பார்க்கலாம்

சைவ உணவு உண்பவர்களுக்கு போதுமான புரதம் கிடைப்பதில்லை என்பது ஒரு கட்டுக்கதை. சைவ உணவுகளிலும் அதிக புரதங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவுகளில் இருக்கும் புரத மூலங்களைப் பற்றி மக்களுக்கு போதுமான அறிவு இல்லை. சைவ புரத மூலங்கள் உணவு முறைகள் மற்றும் உணவு அட்டவணைகள் பற்றி பார்க்கலாம். வொக்ஹார்ட் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் ரியா தேசாய் கூறியுள்ளதை பார்க்கலாம். சைவ உணவு உண்பவராக இருந்தால் இங்கே பல புரத மூலங்கள் மற்றும் உணவுத் திட்டங்கள் உள்ளன இதன் மூலங்கலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, சிறுபருப்பு மற்றும் மைசூர் பருப்பு போன்றவை புரதத்தின் சிறந்த ஆதாரங்களாகும் அவை சாலடுகள், சூப்கள் மற்றும் கறிகள் போன்ற பல்வேறு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கிச்சடி ஒரு முழுமையான புரதமாகும். உடலின் புரதத் தேவைகளை உறுதிப்படுத்த இரவு உணவில் அல்லது மதிய உணவில் ஒரு முறையாவது அவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பால் பொருட்கள்
பால், பனீர், சோயா மற்றும் டோஃபு ஆகியவை கணிசமான அளவு புரதத்தை வழங்கும் சிறந்த இறைச்சி மாற்றாகும். பனீர் சாலட் அல்லது டோஃபு கறியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

விதைகள்
பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை, சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை சாலடுகள், ரைட்டாஸ் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். இது புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. ஒரு கப் தேநீர் மற்றும் காபியுடன் மாலை நேர சிற்றுண்டியின் ஒரு பகுதியாகும்.

இந்த புரதச்சத்து நிறைந்த உணவை சேர்ப்பதன் மூலம், சைவ உணவு உண்பவர்கள் தங்கள் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க இணைந்திருங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us