\
FucherdPsychology

சூழ்நிலைகளை பொறுப்பெடுத்தாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான பத்து விதிகள்

மகிழ்ச்சி என்பது தானாக வராது அதை நீங்கள் தான் வரவழைக்க வேண்டும் உங்கள் நடத்தை மற்றும் சிந்தனைகளை பொறுத்தே உங்களுக்கு மகிழ்ச்சி வரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் பின்வருபவற்றை கவனம் செலுத்த வேண்டும்.

1.உங்களால் மாற்றக்கூடிய விஷயங்களை மட்டுமே நீங்கள் கவனம் செலுத்துங்கள் உங்களால் முடிந்த அளவு செய்வதை செய்த பின் அதை விட்டுவிட்டு எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

2.நீங்கள் விரும்பாத விஷயங்களுக்கு கவனம் செலுத்தாதிர்கள் அதை மறந்து விடுங்கள் அல்லது மாற்றிக் கொள்ளுங்கள் இவற்றை உணர்ந்து கொண்டால் மனக்கசப்பு ஒருபோதும் உங்களை பாதிப்பதில்லை.

3.ஒரு இடத்திலேயே இல்லாமல் வெவ்வேறு இடங்களுக்கு சென்று மரங்கள் பூக்கள் பறவைகள் ஆகியவற்றை உங்கள் நேரத்தை செலவிடுங்கள் அவை உங்களுக்கான ஒரு இயற்கை வரப்பிரசாதம் ஆகும் இவைகள் உங்களுக்கு மிகவும் ஒரு ஆறுதலையும் கவலைகளை மறக்கும் தன்மையையும் தரும்.

4.உங்களுக்கான நபர்களுடன் நீங்கள் சிறிது நேரம் செலவிடுவது மற்றும் கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளை உரையாடுவது மற்றும் அவர்களுடன் பொழுதுகளைக் கழிப்பது போன்றவை நல்ல நினைவுகளை தரும்

5.சமூகத்துடன் ஒன்றிணைந்து ஒரு பகுதியாக இருப்பது நல்லது உதாரணமாக தன்னார்வல தொண்டர்களாக இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஒருவித மன மகிழ்ச்சி கிடைக்கும்.

6.நன்றி உணர்வுடன் இருப்பது நம்மிடம் உள்ள அனைத்து வளங்களுக்கும் ஒரு நன்றி தெரிவித்து மனதை ஒருமுகப்படுத்தி அதை ஆரோக்கியமாகவும் இன்றுவரை நமக்கு கிடைத்த அனைத்து வளங்களுக்கும் அன்புகளுக்கும் இந்த இயற்கைக்கு நன்றி உழைத்தல் ஒருவித மன இதத்தை தரும்.

7.அதிகமாக மொபைலில் நேரத்தை செலவிடுவது சோசியல் மீடியாக்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து உங்களது நேரத்தை ஏதேனும் உங்களுக்கு பிடித்த உபயோகமான பொழுதுபோக்கு அல்லது கல்வி கோ நேரத்தை செலவிட்டால் அது உங்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் மற்றும் மன சாந்தி கொடுக்கும்.

8.உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கான நேரத்தை உங்களுக்காக செலவிட்டு உடற்பயிற்சி யோகா நாட்டியம் ஆகிய உடல் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி உங்கள் உடலையும் உங்கள் வலிமையும் மேம்படுத்தி உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.

9.உங்களிடம் பிறர் எவ்வாறு நடந்தாலும் நீங்கள் எல்லோரிடமும் எப்பொழுதும் அன்பை மட்டுமே காட்டி வந்தால் அந்த அன்பு நாளை உங்களிடம் திரும்பி வரும் அதனால் எல்லோரிடமும் அன்பாகவும் பணிவாகவும் இருந்து பேசுவது ஒரு சிறந்த மருந்தாக மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.

10.அதேபோன்று வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றுமே நல்ல எண்ணங்களில் கவனம் செலுத்துவதனால் நன்மையை நம்மை தேடி வரும் அதனால் தீய எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் விட்டொழித்து நல்ல சிந்தனைகளை மட்டுமே கவனம் செலுத்தி வளமாக இருப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us