இயற்கை அழகு குறிப்புகள்!
தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டுமென்றால் கொத்தமல்லி இலையின் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகும் உருளைக்கிழங்கு சாறுடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும்.
இரண்டு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும் அதற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் உடன் ஒரு ஸ்பூன் வெண்ணெயை சேர்த்து பசை போல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இருமுறை செய்துவர சருமம் ஆரோக்கியம் மேம்படும்.



