
நாம் அருந்தும் உணவுல் நச்சு எதுவும் இல்லை என்பதை சரியாக கூறுவது சிறு நீராகும். அதே போல் சிறுநீரில் உள்ள நிறம், நாற்றம் இவற்றை வைத்தே உடலில் உள்ள பாதிப்பை அறியலாம். இந்த நிலையில் சிறுநீர் நிறமாற்றம் அடையவும் சிறுநீரக கற்கள் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவு மற்றும் பானங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
உப்பு உணவு
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உருவாக்கப்படும் உணவுகளில் அதிக உப்பு இருக்கிறது. இது சிறுநீர் பாதிப்படைய முக்கிய காரணமாக உள்ளது.
கார்ன் சிரப்
இது பார்ப்பதற்கு தீங்கற்றதாக இருந்தாலும் இதன் சேர்க்கையானது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சர்க்கரை கலந்த சோடாக்கள் மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக உட்கொள்ளும் போது, யூரிக் அமிலத்தின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரில் மாற்றம் ஏற்படுகிறது.
பால் பொருட்கள்
பால் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் பாஸ்பரஸ் அதிகமாகி சிறுநீரை சரிவர வெளியேற்ற விடாமல் தடைசெய்கிறது. குறிப்பாக சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு விளைவுகள் தீவிரமாக இருக்கும்.
இறைச்சி
இறைச்சியில் பாஸ்பரஸ் இருப்பதால் அதிக அளவு உப்பினை சிறுநீரில் கலக்க செய்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஏற்கனவே நோய் உள்ளவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது
கடல் உணவு
சில கடல் உணவுகள் சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கு தீங்காக அமைகிறது. குறிப்பாக மத்தி , நெத்திலி, மட்டி போன்றவை சிறுநீர் அளவிலும் நிறத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
தேயிலை மற்றும் காபி
காபி, டீ அதிகமாக உட்கொள்வதால் நீர் இழப்பை ஏற்படும். சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்
மது
அதிகப்படியான மது அருந்துதல் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. யூரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தி சிறுநீரகத்தை சீரழிக்கின்றது.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து உணவு மற்றும் பானங்கள் மிதமாக உட்கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் உங்கள் உடலில் சிறுநீரில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது சிறு நீர் வெளியேறும் போது வலி, எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
