
காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக ஏதாவது சமைத்துவிட்டு பணிக்குச் செல்லலாம் என்ற எண்ணம் வரும். வழக்கம் போல இட்லி, தோசை, பொங்கல்,உப்புமா தான் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இருக்கும். ஒரே மாதிரியாக சாப்பிடும் போது ப்ரேக் பாஸ்ட் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா? என்று யோசிக்கத் தொடங்கிவிடுவோம்.
குறிப்பாக சில நேரங்களில் வீட்டில் உள்ள குழந்தைகளும் சளிப்புடன், அம்மா வேற ஏதாவது சாப்பாடு செஞ்சுத்தாங்களேன்னு என்று கேட்பார்கள். ஆனால் என்ன? அவசர கதியில் வயிறு நிறைந்தால் போதும் என்பது தான் நினைப்போம். இதுப்போன்ற பிரச்சனை இனி வராது. உங்கள் குழந்தைகளுக்கு வெரைட்டியாக காலை உணவை செய்துக் கொடுக்க வேண்டும் என்றால் பிரட் உப்புமா உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். அதுவும் அவர்களுக்குரிய விருப்பமான நூடுல்ஸ் போன்று வெறும் 5 நிமிடத்தில் நீங்கள் செய்துவிட முடியும். இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்…
தேவையானப் பொருள்கள்:
பிரட் – 5 துண்டுகள்
பெரிய வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள்- சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு- சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் / வர மிளகாய் – 1
பிரட் உப்புமா செய்முறை:
முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணல் சூடேறியதும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !
- ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்
- காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !
- அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !
இதையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிதுநேரம் வதக்கவும். இதோடு இஞ்சி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும், பொடியாக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வேக வைத்தால் போதும். சுவையான பிரட் உப்புமா ரெடி.
குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைளில் ஒன்றாக உள்ளது உப்புமா. பலருக்கு இதன் சுவை சுத்தமாகப் பிடிக்காது என்றாலும் இதை விரும்பிச்சாப்பிடும் ஓர் கூட்டமும் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் உங்களது வீடுகளில் சீக்கிரம் ரெடியாகும் பிரட் உப்புமாவை ருசித்துப் பாருங்கள். ரவா உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமாவிற்கு நிச்சயம் ஒரு நல்ல மாற்றாகவே அமையும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
