\
FucherdPsychology

Stress வேணுமா அப்போ இத சாப்புடுங்க!

Stress, Anxiety போன்ற மனநல பிரச்னைகள் இன்று அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு நமது வேலைப்பழு, வாழ்க்கை முறையைத் தாண்டி உணவுப்பழக்கமும் முக்கிய காரணம் என்கின்றனர்.

சில உணவுகளை நாம் உட்கொள்ளும் போது அவை நமக்கு ஸ்ட்ரெஸ் வர காரணமாக இருக்கின்றன. இந்த உணவுகளைத் தெரிந்துகொண்டால் நாம் முன்னெச்சிரிக்கையாக இவற்றைத் தவிர்க்கலாம்.

அல்லது நமக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கலாம். நமக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் உணவுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இனிப்பு விருந்துகள்
நமக்கு பதற்றம் அதிகரிப்பத்தில் நம் உடலில் சேர்த்துக்கொள்ளும் இனிப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
கேக்குகள் போன்ற பேக்கரி இனிப்புகள், நம் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடனடியாக குறைந்து மீண்டும் அதிரித்து என சீரற்று இருக்க காரணமாகின்றன.

இதனால் நமது ஆற்றல் வெளிப்பாடும் பாதிக்கப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது மிகவும் சோர்வாகவும் கவலையாகவும் உணர்கிறோம். பதற்றம் ஏற்பட்டு மன அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது.
எல்லா உணவுகளும் இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தாது என்றாலும் நாம் செயற்கையாக சேர்க்கப்பட்ட இனிப்பை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

செயற்கை இனிப்பு
சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் NNS கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆஸ்பர்டேம் பயன்பாடும் மிக மோசமான விளைவை உருவாக்கும் என்கின்றனர். ஆஸ்பர்டேம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்…

காஃபின்
டீ, காபியில் இருக்கும் காஃபின் அதிகமாக உட்கொள்வதால் அட்ரீனல் சுரப்பியில் பிரச்னைகள் ஏற்படும்.
இது நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதனால் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனால் பதட்ட உணர்வு ஏற்படும்.
டீ, காபி மட்டுமல்லாமல் சாக்லேட் மற்றும் சில தலைவலி மருந்துகளிலும் காஃபின் இருக்கிறது. இது ஸ்ட்ரெஸை ஏற்படுத்தும்.

சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
பிரட், பாஸ்தா, வெள்ளை அரிசி போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலுக்குத் தேவையானதை விட அதிகப்படியான சர்க்கரையை சேர்க்கும்.இதனால் மன அழுத்தம் ஏற்படுவதுடன் மூட் ஸ்விங்ஸ் எனும் நிலையற்ற மனநிலையும் உருவாகும்.
பொதுவாக ரீஃபைண்ட் கார்ப்ஸ் எடுத்துக்கொள்ளும் பெண்கள் மிகவும் கவலையாகவும் சோர்வாகவும் உணருகின்றனர்.இந்த உணவுகளால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதயநோய்க்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பொரித்த உணவுகள்
பொரித்த உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் ஃபேட் எனும் கொழுப்பு இருக்கிறது. இது உடல் வீக்கத்துக்கு வழிவகுக்கும்.
உடல் பருமனாகும் போது நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்.

ஆல்கஹால்
மது அருந்துவது சமுக பதற்றத்தை நீக்கும் எனக் கூறப்பட்டாலும், உண்மையில் அது பதற்றத்தை அதிகரிக்கவே செய்கிறது.

மது அருந்துவதால் உடலில் நீரேற்றம் குறைகிறது. தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது.
மது உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்துவதைப் போலத் தெரிந்தாலும் அதிக பதற்றம் ஏற்படதான் வழி செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us