\
Samayam

கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.

திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது.

காத் என்றால் திருமணம், அயணம் என்றால் ஆறுமாதம்.

குடும்ப பிரச்னை, உறவினர்களால் பிரச்னை,பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சன்னதியில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று முறை சென்று திருமணப்பேறு வேண்டி அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

  • முதல் வாரம் காத்யாயனி பூஜை
  • இரண்டாம் வாரம் விவாஹ ரட்சாபூஜை
  • மூன்றாவது வாரம் ஜென்ம பத்ரிகா பூஜை

– என்ற படி செய்து மங்கள ரட்சை கட்டிக்கொள்ள வேண்டும்.

26 வயதைக் கடந்து களத்திர தோஷத்தால் திருமணம் தடைபடும் பெண்களுக்கு சுபநாளில் காமேஸ்வரி துளசி யக்ஞம் என்ற விவாஹ வேள்வி நடத்தப்படுகிறது.

ஆலயத்தில் தோரணகணபதி, மாரிசக்தி, பாலமுருகன், நாகராஜர், துர்க்கை,பத்ம விமானக்கருவறையில் கிழக்கே திருமுகம் கொண்டு ஒளிதரும் சந்திரகாந்தக் கல்லால் செதுக்கப்பட்டவளாக அமர்ந்து அருள் தருகிறாள்.

ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் மாலை 6 மணிக்கு புத்ர லாபம் அருளும் பாலகாத்யாயனி யக்ஞம் செய்து இலவசமாக மூலிகை மருந்து ப்ரசாதம் வழங்கப்படுகிறது.

ஓம் ஶ்ரீம் கல்யாண வரம் தரும் காத்யாயனி தேவியே போற்றி..!

ஆலய பூஜை சேவை அறிய அலைபேசி எண்: 9551184326

அனுப்பியது: கே.குமார சிவாச்சாரியார், குன்றத்தூர்.

கோவில் செல்லும் வழி: சென்னை மாநகரின் தெற்கு பாகமான குன்றத்தூர் என்னும் புனித தலத்தில் இந்த “சக்தி கோவில்” இருக்கிறது. ‘கோவில் நகர்’ என்றும், செல்வமலி குன்றத்தூர் என்றும் புகழப்படுகின்ற இவ்வூரில்தான் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் அவதரித்தார்.

பெருமைமிகு குன்றத்தூரில் முருகன் மலைக்கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் தார்சாலை ஓரத்திலும் திரு ஊரகப்பெருமாள் சன்னதிக்கு 20 அடி தூரத்திலும் இந்த ‘சக்தி கோவில்’ இருக்கிறது.

https://www.google.com/maps/dir//Kathyayani+Amman+Temple+X3PW%2BHGW+Sri+Arunachaleswar+Nagar,+Kundrathur+Kovur,+Tamil+Nadu+600069/@12.9864918,80.0963127,14z/data=!4m5!4m4!1m0!1m2!1m1!1s0x3a528aaaefc653a3:0x2c7a9aa396483bca

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us