\
Health

அன்றாடம் சாப்பிட வேண்டிய பழங்கள்!

உடலில் பல சத்துக்களை இயற்கையாகப் பெறுதற்கு பழங்கள் நமக்கு பெரும் உறுதுணையாக இருக்கின்றன அவ்வகையில் பழங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பார்ப்போம்.

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள் உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதால் உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் மலமாக வெளியேறும் இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதேபோல் நாம் பழங்களை உணவு சாப்பிட்ட பின் உடனடியாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் நாம் உண்ணக்கூடிய உணவு கெட்டுப் போயிருந்தாலோ அல்லது புளித்துப் போயிருந்தாலும் அதனுடன் அந்த பலமும் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும் பழத்தின் அனைத்து சத்துக்களும் வீணாகிவிடும் இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதற்கு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது பின்னரோ சாப்பிடுவது மிக நல்லது

பழங்களை எப்பொழுதும் ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது அதிக பலன்களை ஏற்படுத்தும் இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சாலச் சிறந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெறும் வயிற்றில் பழம் சாப்பிட்டால் ஆயுள் கூடும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் ஆற்றல் மகிழ்ச்சி கிடைப்பதுடன் உடல் பருமன் அடையாது. அதேபோல் பழங்களை ஜூஸாக குடியுங்கள் புட்டியில் அடைக்கப்பட்டதை குடிக்காதீர்கள் அதேபோல் பழங்களை வேகவைத்த வைத்தாள் சத்து போய்விடும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us