\
Health

மருத்துவ குணம் அதிகமாக காணப்படும் கராம்பு!

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நீக்கும் கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியை தடுக்கும்.

ஜீரன உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கின்றது இதனால் ஜீரண கோளாறுகள் நீங்குகின்றன நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும் தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும் கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம் ஈறு வீக்கம் பல்வலி ஆகியவை குணமாகும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

மூன்றிலிருந்து ஐந்து தொழில்கள் நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும் தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும் தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us