
சமீப நாட்களாக இளைஞர்கள் பலர் இதய நோய் மற்றும் மாரடைப்பிற்கு ஆளாகின்றனர். திரைபிரபலங்கள் உட்பட பலர் இளம் வயதில் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர்.சமீபத்தில் கூட சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இப்படி இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மன அழுத்தம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதயத்தை பாதிக்கும்.இளம் வயதினருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு அளவுகள் அதிகரித்து வருகின்றன. புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இதய பாதிப்பை ஏற்படுத்தும். இதயப் பிரச்சனைகளைத் தடுக்க ஒரு சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது முக்கியம்.
- நீரிழிவு நோய்: உயர் இரத்த சர்க்கரை அளவு உங்கள் இரத்த நாளங்களை பாதிக்கிறது. இது தமனிகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்து அடைப்புகளை ஏற்படுத்துகிறது.
- உயர் இரத்த அழுத்தம்: இதய தசைகளை தடிமனாக்குகிறது, அதிகமான அழுத்தம் கொடுக்கப்பதனால் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது
- உடல் பருமன்: அதிக உடல் எடையில் இருப்பது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவு முறை, மது அருந்துதல் மற்றும் ஒழுங்கற்ற தூக்கம் காரணமாக கொழுப்பு திரட்சி இளைஞர்களில் காணப்படுகிறது.
- புகைபிடித்தல்: சிகரெட் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்குமாம். சிகரெட் புகையில் உள்ள இரசாயனங்கள் தமனிகளுக்குள் உள்ள இரத்தத்தை தடிக்கவோ அல்லது உறையவோ வைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறமோ, அதே அளவுக்கு மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை நகர்த்த சரியான உணவு பழக்கமும், தூக்கமும் தேவைப்படுகிறது.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
