
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது. கொரோனா காலத்தில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகததால் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 5 தேசிய விருதுகளையும் பெற்றது. நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார், படத்தின் கதாநாயகியான அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
சூரரைப்போற்று வெற்றி கூட்டணியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் சூர்யா 43வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் . படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளார். துல்கர் சல்மான்,சூர்யாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.எனவே சூர்யா- துல்கர் கூட்டணியை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ‘புறநானாறு’ என்று பெயர் வைத்துள்ளனர்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
