\
Samayam

கந்தசஷ்டி விரதம் சிறப்பு !

கந்த சஷ்டி

இந்த ஆண்டு முருகனுக்கு உரிய சஷ்டி விரதம் வரும் 2019 அக்டோபர் 28ம் தேதி திங்கட் கிழமை தொடங்குகின்றது. இந்த விரதம் 6 நாட்கள் நடந்து நவம்பர் 2ஆம் தேதி அதாவது சூரசம்ஹாரப் பெருவிழாவுடன் நிறைவடைகின்றது.

சஷ்டி சிறப்பு :
சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் குழந்தை வரும் – என்ற ஒரு பழமொழி கூறுவதுண்டு. ஆனால் தற்போது ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என மாற்றிவிட்டனர்.

கந்த சஷ்டி திருநாள்:
பொதுவாக குழந்தை வரத்திற்காக இருக்க வேண்டிய விரதம் இந்த சஷ்டி விரதம். பெரிய சஷ்டி என்றால் தீபாவளியைத் தொடர்ந்து வரும் சஷ்டியை கந்த சஷ்டி, மகா சஷ்டி என்ற மிகப்பெரிய திருநாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

குழந்தை வரத்திற்கான சஷ்டி விரதம் :
குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இருவரும் இந்த சஷ்டி விரதம் இருக்கலாம். சில குடும்பத்தில் ஆண் விரதம் இருப்பார், பெண் விரதம் இருக்கமாட்டார். சில இடத்தில் பெண் விரதம் ஏற்று ஆண் விரதம் இல்லாமலும் இருப்பதும் உண்டு.

விரதம் என்றால் காப்பது என்று பொருள். உங்களால் காக்க முடிந்தால் விரதம் இருக்கலாம். சிலருக்கு சர்க்கரை வியாதியோ, வேரேதேனும் உடல் பிரச்சினை, சாப்பிடவிட்டால் மயக்கம் வரும் என்பவர்கள் இந்த விரதம் இருப்பதைத் தவிர்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us