இத்தனை நன்மைகள் உள்ளதா ஆயில் புல்லிங் செய்வதால்…?

ஆயில் புல்லிங் தொடர்ந்து செய்வதன் மூலம் வாயில் ஏற்படும் துர்நாற்றம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, பற்களின் பழுப்பு தன்மை, இவைகள் நீங்கி வாய் சுத்தப்படுத்தப்படுகிறது.
சுவாச பிரச்சனைகளை தடுக்கிறது வறட்டு இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சினை இவைகளுக்கெல்லாம் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
உடலில் அதிகப்படியான பித்தம் உடையவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். சூட்டினால் இவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். உடலில் உள்ள பித்தம் குறைந்து, சூடு தணிந்து குளிர்ச்சியான நிலையைப் பெற ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
சரும பொலிவிற்கு ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் நம் சருமம் பொலிவாக காட்சியளிக்கும்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்கப்பட்டு, தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது.
மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் இவைகள் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் மூட்டு வலி வராமலும் தடுக்கலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் முறை:
காற்றோட்டமாக உள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் நம் மீது படும்படி அமர்ந்து கொள்ள வேண்டும். கழுத்து பகுதி, தோல் பகுதி இவைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி வாயின் எல்லா பாகங்களிலும் படும்படி சுழற்ற வேண்டும். வாயில் ஊற்றப்பட்ட எண்ணெய்யானது பசை போன்று வரும் வரை வைத்திருக்கலாம். அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் கசியும் வரை வைத்திருக்கலாம்.
இந்த ஆயில் புல்லிங் செய்ய நல்லெண்ணெய் தவிர தேங்காய் எண்ணெய்யில் கொப்பளிக்கலாம். ஆனால் நல்லெண்ணெய்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நல்லெண்ணெய்யை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வாயில் வைத்திருந்து கொப்பளித்து துப்புவது நல்ல பலனை அளிக்கும்.



