\
FucherdPsychology

பெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகள் தெரியுமா?

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கும் அதில் சில குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையும் அதிகப்போகும் போன்ற நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத குணங்களை அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர்.

ஒரு குழந்தை வளர்ந்ததும் அதன் குணம் சரியில்லை என்றால் வளர்ப்பு சரியில்லை என்று பலரும் கூறுவதை கேட்டிருப்போம் அது அந்த நபரின் பெற்றோரை குற்றம் சாட்டுவதாக அமைகின்றது.

அதற்கு முழு காரணம் பெற்றோராகவும் இருக்கலாம் அல்லது குழந்தைகள் பழகிய நபர்களாகவும் இருக்கலாம் பொதுவாக குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதை விட கேட்ட வார்த்தைகளையே பேசுவது தான் அதிகம்.

எனவே குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர்ப்பது மட்டுமல்ல குழந்தைகளின் குணத்தை முறையாக செதுக்கித்தலும் பெற்றோரின் பங்குகள் ஆகும் அப்பேற்பட்ட பெற்றோர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால் அந்தக் குழந்தைகள் என்ன ஆவார்கள்?

நீங்கள் இடும் சண்டை உங்கள் குழந்தைகளை எப்படி பாதிக்கின்றது என்பதை அறிய இந்த மாற்றங்கள் அவர்களுக்குள் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

பாதுகாப்பற்ற உணர்வு: குழந்தைகள் பொதுவாக தங்களின் பெற்றோரின் சண்டையை பார்க்க நேர்ந்தால் அவர்கள் முதல் சிந்தனை நமக்கு என்ன ஆகும் என்பதாகத்தான் இருக்கும் ஒரு குழந்தை எவ்வளவு சண்டைகளை பார்க்கின்றதோ அவ்வளவு அளவு பாதுகாப்பற்ற உணர்வை மனதில் வளர்த்துக் கொள்ளும்.

பெற்றோருடன் நெருக்கம் குறைதல்:

குழந்தைகள் எப்பொழுதும் அம்மா அப்பாவிடம் சண்டைக்குப் பின் யாரிடம் பேசுவது என்ற குழப்பத்திலேயே இருப்பர் அந்தக் குழப்பம் இருவரிடம் சற்று ஒதுங்கி இருக்கலாம் என்று தோன்றும் அது நாளடைவில் குழந்தைகளை தங்களுக்கான தனிப்பட்ட விஷயங்கள் மறைக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர்.

மன அழுத்த சூழல்:

பெட்ரோலின் சண்டைகளால் பெரியவர்களைப் போன்று மன அழுத்தம் ஏற்படும் இதையும் பெற்றோர் உணர்ந்து கவனம் செலுத்தவில்லை என்றால் நாளடைவில் குழந்தைகளுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

நீண்டகால மனநல பாதிப்பு:

2012 ஆம் ஆண்டில் சைல்ட் டெவலப்மெண்ட் என்ற அமெரிக்க பத்திரிக்கை ஆய்வு ஒன்று அதில் ட்ருவர்கள் பிரச்சனையினால் குழந்தைகள் மனநலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி ஆராயப்பட்டது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறுவர்களை தேர்வு செய்து ஆய்வாளர்கள் கண்காணித்தார் அதில் பல குழந்தைகளை தொடர்ந்து சோர்வு மனநலம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு கண்டறியப்பட்டது.

பெற்றோர் சண்டையிடுவதனால் இந்தப் பிரச்சனை வந்தது என அறியப்பட்டது.

அறிவாற்றல் மற்றும் செயல் திறன் குறைபாடு:

குழந்தைகளை படிப்பித்தாலும் ஒரு செயல் செய்வித்தலும் மிகவும் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றனர் பெற்றோர்களின் சண்டையில் குழந்தைகளின் உணர்ச்சிகள் மற்றும் கவனசிதர்களை கட்டுப்படுத்த அவர்களால் இயலவில்லை.

உளவியல் பிரச்சனை:

பெட்ரோல் சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகள் தங்கள் சகோதரர்களுடன் சண்டையிடும் பண்பை கொண்டுள்ளனர் பெற்றோர்களிடையே ஏற்படும் வாக்குவாதத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை குழந்தைகள் தனது சகோதரன் அல்லது சகோதரியிடம் கூறிவிட்டு கடக்கின்றனர்.

நடத்தையில் சிக்கல்:

பெற்றோர் சண்டைகளை பார்க்கும் குழந்தைகள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றனர் குற்ற செயல்கள் செய்வது பல ஒழுங்கீன பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர் அத்துடன் பள்ளிகளில் ஆசிரியர்கள் கூறுவதையும் முறையாக கடைபிடிக்க தவறி விடுகின்றனர்.

முறையற்ற உணவு பழக்கம் மற்றும் உடல் நலன் பாதிப்பு:

அதிகம் சண்டைகளை பார்க்கும் குழந்தைகளை முறையான உணவு பழக்கத்தை கொண்டு இருப்பதில்லை அவர்கள் உடல் நலனிலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் அவர்களுக்கு வயிற்று வலி தலைவலி உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகின்றது.

தவறான பழக்கங்கள்:

அதிகம் பிரச்சினைகளை பார்க்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் குடிப்பழக்கம் புகைபிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் அது அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் வடுவின் வெளிப்பாடு.

வாழ்க்கை குறித்த எதிர்மறை எண்ணம்:

அதிகம் சண்டைகளை பார்த்து வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை பற்றிய எதிர்மறை பார்வையைக் கொண்டிருக்கின்றனர் அதாவது தனக்கும் எதிர்கால வாழ்க்கையில் இது போன்ற சண்டைகள் ஏற்படும் நான் மோசமானவன் என்பது போன்ற எண்ணங்கள் உருவாகலாம்.

இவ்வாறு குழந்தைகள் தங்கள் இல்வான குணங்களை மறந்து வாழும் சூழலில் உருவாக்குகின்றது எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராதவும் அன்னை வளர்ப்பது என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருக்கலாம அது அன்னை வளர்ப்பில் மட்டுமல்ல அன்னை தந்தை இருவரின் ஒற்றுமையிலும் உள்ளது என்பது நிதர்சனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us