
இளநீரில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. இளநீர் எளிதில் ஜீரணமாகும். இதில் நிறைந்துள்ள பயோ ஆக்டிவ் என்சைம்கள் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன. வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால், அதிக கொழுப்பை எரிக்க முடியும். இது உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்து, உடலை குளிர்ச்சியாக உணர வைக்கிறது. இளநீர் உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இரட்டிப்பு பலன்களை அள்ளி தரும் நெல்லி கற்றாழை ஜூஸ்!
இளநீர் குடித்தால் உடல் எடை குறையுமா?
இளநீர் குடிப்பது உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை கொடுக்கும். இதில் இயற்கையான என்சைம்கள், பொட்டாசியம், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் யாவும் உடலை ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கின்றன மற்றும் உடலின் நீர் சத்துக்களை தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது, உடலில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இளநீர் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை கொடுத்தாலும், இதில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். சுமார் ஒரு கிளாஸ் இளநீரில் 2.6 கிராம் உணவு நார்ச்சத்துக்கள் உள்ளன. உடல் பருமன் அல்லது அதிகப்படியான உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு இளநீர் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
தயிர் ஸ்மூத்திகள், மில்க் ஷேக்குகள் அல்லது சாக்லேட் பானங்கள் போல் இல்லாமல், ஒரு கிளாஸ் இளநீரில் 0.48 கிராமை விட குறைவான கொழுப்புகள் மட்டுமே உள்ளன. ஆனால் அதே அளவிலான ஒரு கிளாஸ் சாக்லேட் மில்க் ஷேக்கில் சுமார் 8.10 கிராம் கொழுப்புகள் வரை இருக்கலாம். அதிக சர்க்கரைகள் நிறைந்த ஆற்றல் பானங்களுக்கு பதிலாக இளநீரை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் மிக வேகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் அல்லது அதிக வியர்வை சிந்துகிறீர்கள் என்றால், உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் இழந்த ஆற்றலை மீட்டெடுக்க இளநீர் உதவும்.
இளநீர் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா?
சிறந்த பலன்களை பெற இளநீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இது உங்களுடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இளநீரை குடித்து பயன்பெறலாம்.
யாரெல்லாம் இளநீரை அதிகம் குடிக்க கூடாது?
இளநீரில் அதிக அளவு சத்துக்கள் இருந்தாலும், இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோய் அல்லது வளர்ச்சிதை மாற்ற பிரச்சனை உள்ளவர்கள் தங்களுடைய சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இளநீரில் பொட்டாசியம் உட்பட ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இருப்பினும் அதிகப்படியான பொட்டாசியம் உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு குமட்டல், கூச்சம், தசை பலவீனம் போன்ற அறிகுறிகளை உணரலாம். இது தொடர்ந்தால் இதய நோய்களும் ஏற்படலாம். இது போன்ற நிலைகளை தடுக்க ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
