
மார்க்ஸ் உருவாகிறது. இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது தொடங்கி, ஹார்மோன் அதிகரிகப்பு, அரிப்பு போன்ற பல காரணங்களால் அடிவயிற்றில் இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகிறது. பிரசவத்திற்கு பிறகும் இது மறையாமல் நிரந்தரமாக தங்கி விடுகிறது. அவற்றை வீட்டிலேயே அகற்ற உதவும் சில குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டிலேயே செய்ய வேண்டிய விஷயங்கள்
உருளைக்கிழங்கு சாறுடன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து மிக்ஸ் செய்து, குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடங்களில் தடவவும். கொஞ்சம் கொஞ்சமாக அவை மறைய தொடங்கும். அதே போல் தினமும் குளிப்பதற்கு 30 நிமிடம் முன்பு மஞ்சள் தூளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெச் மார்க்ஸ் மீது தடவி மசாஜ் செய்யவும். இது மிகச் சிறந்த பாட்டி வைத்தியமாக சொல்லப்படுகிறது.
பேக்குகள்
கற்றாழை ஜெல் ஸ்ட்ரெச் மார்க்ஸ் மறைய கைக்கொடுக்கிறது. இதற்கு அரைத்த பப்பாளி, கற்றாழை ஜெல், தேன் சேர்த்து மிக்ஸ் செய்து, தினமும் குளிப்பதற்கு முன்பு ஸ்ட்ரெச் மார்க்ஸ் மீது தடவவும். ஆழமான ஸ்ட்ரெச் மார்க்ஸ் மறைய தொடங்கும். அந்த பகுதி மென்மையாக மாறும்.
ஆயில் மசாஜ்
பாதாம் எண்ணெய் ,தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் , கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, ஸ்ட்ரெச் மார்க்ஸ் மீது தடவி கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை மசாஜ் செய்யவும்.
பாதாம் எண்ணெய் மற்றும் காபி பேக்
காபி தூளில், பாதாம் எண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெச் மார்க்ஸ் மீது தடவி 20 நிமிடம் ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாஷ் செய்யவும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஸ்ட்ரெச் மார்க்ஸ் மறைய பெரிதும் கைக்கொடுக்கிறது. எலுமிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து, ஸ்ட்ரெச் மார்க்ஸ் மீது தடவி ஸ்க்ரப் செய்யவும். தினமும் இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு : இவை அனைத்தும் முற்றிலும் வீட்டு வைத்தியம் என்பதால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ஆப்ரேஷன் செய்த பெண்கள் என அனைவரும் மருத்துவரிடம் உரிய அனுமதி பெற்று இந்த வைத்தியங்களை ட்ரை செய்யவும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
