\
Health

தயிர் இவ்வ்ளோ நல்லதா .இது தெரியாம போச்சே !..

தயிர் தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்தை அதிகரிக்கிறது.

மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரை  தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால்  வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

 பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள்  மற்றும் பற்கள் வலுவடைகின்றன.

மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது. தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும்.

எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காயவைத்த பின்னர் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை குறையும். தயிர் உங்கள் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால், கோபம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது.

தயிர் சாப்பிட்டால் தூக்கம் வரும் என கூறுவது இதன் காரணமாகத்தான். தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய  நோய்களுக்கான வாய்ப்பும் குறைகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us