
எல்லோருக்கும் ஸ்லிம் & பிட் ஆக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை பழக்க வழக்கங்களால் பலரும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். தொங்கும் தொப்பை, பொருந்தாத ஆடைகள், குடும்பம் மற்றும் நண்பர்களின் கேலி என உடல் பருமனால் மன அழுத்தமும் உண்டாகிறது.
உடல் எடையை குறைக்க பல மணி நேரங்கள் ஜிம்மில் நேரம் செலவிடுவது முதல் பிடித்த உணவுகளை தவிர்ப்பது வரை பல முயற்சிகளை செய்கிறோம். தொப்பையை குறைப்பதற்கான ஒரு இயற்கை தீர்வை தேடுகிறீர்கள் என்றால் இந்த சக்தி வாய்ந்த நீரை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அத்திப்பழ நீரை தினமும் குடித்து வர ஒரு சில மாதங்களிலேயே தொப்பையை குறைத்திடலாம். தொப்பையை குறைக்க அத்திப்பழ நீரை ஊட்டச்சத்து நிபுணரான பிரியங்கா ஜெய்ஸ்வால் அவர்கள் பரிந்துரை செய்கிறார். அத்திப்பழ நீரின் நன்மைகளை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நீரில் ஊற வைத்த அத்திப்பழம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்
அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால் உடல் எடையும் கணிசமாக குறைய தொடங்கும். உடலின் வளர்ச்சியை மாற்றம் அதிகமாக இருக்கும் பொழுது, நாம் உண்ணும் உணவும் விரைவில் ஆற்றலாக மாற்றப்படும். இதன் மூலம் கலோரிகளை வேகமாக எரித்து, உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கலாம்.
நீரில் ஊற வைத்த அத்திப்பழம் பசி உணர்வை கட்டுப்படுத்தும்
ஊற வாய்த்த அத்திப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளும் அதிக அளவு நார்ச்சத்துக்களும் உள்ளன. எனவே இதை எடுத்துக் கொள்ளும் பொழுது நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக உணர்வீர்கள் மற்றும் அதிக பசியும் எடுக்காது. இதன் மூலம் அதிகப்படியான கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம். இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் அத்திப்பழ நீரை குடித்து பயன்பெறலாம்.
நீரில் ஊற வைத்த அத்திப்பழம் செரிமானத்தை மேம்படுத்தும்
அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனால் மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. அத்திப்பழ நீர் குடிப்பது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதிகப்படியான கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.
அத்திப்பழ நீர் குடிப்பது உடல் எடையை குறைப்பதில் பல அதிசய விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இதனுடன் சரியான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான தூங்கும் நேரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
