\
FucherdSamayam

அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !

முன்காலத்திலேயே அசைவம் என்ற உணவை நம்முடைய முன்னோர்கள் பெரியளவில் வரவேற்கவில்லை. அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. உணவு என்பது மனிதனின் உணர்வுகளோடும், எண்ணங்களோடும் தொடர்பு உடையது. பொதுவாக அசைவ உணவு உடலில் மந்த உணர்வை ஏற்படுத்தக் கூடியது. அசைவ உணவு சாப்பிடும் நாளில் நன்றாக தூங்க வேண்டும் எனத் தோன்றும். ஓய்விலேயே இருக்கலாம் என நினைப்போம். எந்த வேலையையும் செய்வதற்கான சுறுசுறுப்பும் உடலில் இருக்காது. இதற்கு காரணம் அசைவ உணவின் தன்மை. ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தன்மை உண்டு. அசைவ உணவின் தன்மை மந்த நிலையை தரக்கூடியதாகும்.

கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். இதில் உடல் சுத்தம் மட்டுமின்றி மன சுத்தமும் அவசியமாகும்.பொதுவாக நாம் சாப்பிடும் உணவிற்கும் நமது மனதிற்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது.
காரமான உணவை சாப்பிட்டால் அதிகமான கோபம் வரும் என்பார்கள். பொங்கல் மற்றும் தயிர் சாதம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்பார்கள். அதேபோல் அசைவ உணவுகளை சாப்பிடும் போது ஒருவிதமான மந்த நிலை உண்டாகும். மேலும், அசைவ உணவுகள் விரைவில் செரிமானம் ஆகாது.

மனதளவில் நாம் மந்த நிலையில் இருந்தால், கோயிலுக்குள் நிலவும் சூட்சம சக்திகள் மற்றும் தெய்வீக சக்திகளை உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்காமல் போகலாம்.ஏனெனில், அசைவ உணவுகள் சூட்சம சக்தியை உணர்வதற்கான ஆற்றலைக் குறைக்க வல்லது. இதனால் நமது மனதை ஒருநிலைப்படுத்த முடியாது.நாம் செய்த சிறுசிறு தவறுகளில் இருந்து விடுபட கோயிலுக்கு வரும் போது, அசைவம் சாப்பிட்டால் அது நமது பாவக் கணக்கை அதிகரித்து விடும்.

இறைவன் முன் சென்று நிற்கும் போது நம்மிடம் உண்மையான பக்தி இருப்பது அவசியம். உயிரை கொன்று அதை சாப்பிட்டு வழிபடச் செல்லும் ஒழுக்கமற்ற வாழ்வியலை நம்முடைய முன்னோர்கள் ஏற்கவில்லை.

ஒழுக்கம் என்பது மனிதனுக்கு பக்தியுடன் சேர்த்தே போதிக்கப்பட்டது. எந்தவொரு உயிரினத்தையும் கொலை செய்யக் கூடாது என்ற வாழ்வியலை பின்பற்றும் நபரே உண்மையான பக்தி கொண்டவராக இருக்க முடியும் என சொல்லப்படுகிறது. அப்படியான மனிதன் தெய்வத்திடம் சென்று தனக்கு நல்லது நடக்க நினைக்கும் போது அதற்கான அருள் நிச்சயம் கிடைக்கும்.

எனவே தான் கோவிலுக்கு சென்று வழிபடும் நாளில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க நம்முடைய முன்னோர் அறிவுறுத்தினர். இதற்கு முக்கியமான காரணம் மற்றொரு உயிரை எவ்வித காரணமும் இன்றி நேசிக்க கூடிய குணமே. இரக்க குணம் உள்ள இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார். ஆகையால் அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என ஆன்மிக வழிகாட்டுதலில் சொல்லப்படுகிறது.

அந்தக் காலத்தில் தினமும் வேலைக்குச் செல்லும் முன் கோவிலுக்கு செல்வார்கள் அல்லது சாமி கும்பிட்டு பணியை தொடங்குவார்கள். இதன் மூலம் அன்றாடம் சைவ உணவு முறையை பின்பற்றவே பெரியவர்கள் நம்மிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us