பெண்கள் மனஅழுத்தமும் காரணமாக சந்திக்கும் பிரச்சனைகள்!

இன்றைக்கு பெண்கள் பலரும் சொல்லக்கூடிய வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது மன அழுத்தம். என்ன தான் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சந்தோஷமான வாழ்க்கைப் பயணத்தை நடத்தினாலும் சில நேரங்களில் நம்மை அறியாமல் அல்லது குடும்ப சூழல் காரணமாக ஏதோ ஒரு வருத்தம் மனதை ஆட்டிப்படைக்கும். இதை முறையாக கவனிக்காத போது தான் மன அழுத்தம் அதிகமாக உடல் நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் இதனால் பல உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றனர். இதோ அவற்றில் சில உங்களுக்காக..
பெண்களும் மன அழுத்தமும்:
மன அழுத்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பெண்களுக்கு இந்த மன அழுத்தம் அதிகமாகும் போது உடல் வலி ஏற்படுகிறதாம்.
பெண்கள் காலையில் எழுந்தது முதல் இரவு வரை பல வேலைகளை செய்வதன் விளைவாக அவர்களுக்கு தோள்பட்டை வலி, முதுகு வலி ஏற்படுகிறது என்பார்கள். ஆனால் அதிக மன அழுத்தமும் பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது தசை வலி மற்றும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்துகிறது. இதோடு நாள் முழுவதும் அசௌகரியமான சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்பு பகுதிகள் பாதிக்கப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகளையும் பெண்கள் அதிகமாக சந்திக்கின்றனர்.
ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது எண்ணற்ற பிரச்சனைகள் சந்திக்கின்றனர். குறிப்பாக இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்படுத்துவதோடு தூக்கத்தின் தரமும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
அதிக மன அழுத்தம் ஏற்படும் போது இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் அமைப்பில் மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன அழுத்தத்துடன் இருக்கும் போது, ஹார்மோனின் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதனால் மாதவிடாய் சுழற்சிக்கு முன்னதாக அல்லது மாதவிடாய் வராமல் கூட இருக்கும்.
பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தனிமையாக இருப்பது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சில பிரச்சனைகளிலிருந்து எப்படி? நம்மால் விரைவில் வெளிவர முடியும் என மனநிலை அவர்களை நோயாளியாக மாற்றிவிடுகிறது. எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமைகளில் ஒன்று.
பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் முதலில், தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. பிடித்த விஷயங்களை மட்டும் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக மன அழுத்தம் ஏற்படக்கூடிய விஷயங்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பாடல்கள் கேட்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
