ஹெல்தியா உடல் பருமன் குறைய, காலையில் இத குடிங்க!

இந்த ஸ்மூத்தி எல்லா வயது பெண்களுக்கும் ஏற்றது. ஸ்மூத்தியில் சரியான பொருட்களை சேர்ப்பதன் மூலம் உடல் பருமனையும் குறைக்கலாம். கொழுப்புகளற்ற இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியை பிரபல பாலிவுட் நடிகையான ஷியாமா சிக்கந்தர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த கொழுப்புகளற்ற ஸ்மூத்தியை சுலபமாக வீட்டிலேயே தயார் செய்து குடிக்க முடியும். தன்னுடைய தினசரி உடற்பயிற்சிக்கு பிறகு இந்த ஸ்மூத்தியை குடிப்பதாக ஷியாமா பதிவிட்டு இருந்தார். உடற்பயிற்சி மற்றும் இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியுடன் உங்களுடைய நாளை தொடங்கினால் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடனும் புத்துணர்ச்சியாக செயல்படலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஷியாமா அவர்களின் இந்த ஸ்மூத்தியை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 10 நிமிஷம் போதும், விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஹெல்த்தியா கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க!
உடல் எடை குறைய கீரை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
அவகேடோ – ஒரு சிறிய பகுதி
கீரை இலைகள் 10-12
கொய்யா பழம் – 1(சிறியது)
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பிளாக் பெர்ரி 15-20
தேன் – 1 டீஸ்பூன்
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் – ½ கப்
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஸ்மூத்தியை காலை உடற்பயிற்சிக்குப் பிறகு குடிப்பது நல்லது.
உடல் எடை குறைய அன்னாசி பழ ஸ்மூத்தி
இந்த ஸ்மூத்தியை மாம்பழ சீசனில் முயற்சி செய்யும் பொழுது சிறிதளவு மாம்பழத் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
அன்னாசி பழம் – ½ கப்
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் – ½ கப்
செய்முறை
முதலில் வாழைப்பழகங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி சில மணி நேரங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.
நீங்கள் ஸ்மூத்தி செய்யும் பொழுது ஃப்ரீஸ் செய்யப்பட்ட இந்த வாழைப்பழங்களை பயன்படுத்துங்கள்.
ஒரு மிக்ஸர் ஜாரில் ஃப்ரீஸ் செய்யப்பட்ட வாழைப்பழங்கள், பைன் ஆப்பிள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
காலை உடற்பயிற்சிக்குப் பிறகு இந்த ஸ்மூத்தியை ஃபிரஷ்ஷாக தயார் செய்து குடிக்கலாம்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
