முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !

முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதற்காக விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள், சோப்புகள், பாடி க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். அனைத்து நேரங்களிலும் இந்த பொருட்கள் நமக்கு நன்மை பயக்குமா என்றால் கேள்விக்குறி தான்? அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் பல நேரங்களில் உடலுக்கு அலர்ஜி, அரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கெமிக்கல் இல்லாத வீட்டிலேயே எளிமையான முறையில் மூலிகை பொடி தயார் செய்ய முடியும். இதோ அதற்கான சில டிப்ஸ்கள் உங்களுக்காக..
மூலிகை குளியல் பொடி தயார் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு – ஒன்றரை கிலோ
ரோஸ் இதழ்கள்- 200 கிராம்
வெட்டி வேர் – சிறிதளவு
செம்பருத்தி – 200 கிராம்
கடலை பருப்பு- அரை கிலோ
பூலாங்கிழங்கு – 200 கிராம்
வேப்பிலை – சிறிதளவு
கஸ்தூரி மஞ்சள் – 250 கிராம்.
செய்முறை:
மூலிகை குளியல் பொடி தயார் செய்ய வேண்டும் என்றால் முதலில் பாசிப்பயறை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் பொடியாக அரைத்து வைத்தால் 6 மாதங்கள் ஆனாலும் கெட்டு போகாமலும், வண்டு பிடிக்காமலும் இருக்கும். இதே போன்று கடலை பருப்பையும் வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று ரோஸ் இதழ்கள், பூலாங்கிழங்கு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய வாளி அல்லது பாத்திரத்தில் மாற்றி ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து எடுத்தால் போதும். கெமிக்கல் இல்லாத மூலிகை பொடி ரெடி.
மூலிகை குளியல் பொடி பயன்படுத்தும் முறை:
தினமும் சோப்பு பயன்படுத்துவதற்குப் பதிலாக மூலிகை குளியல் பொடியைப் பயன்படுத்தலாம். இந்த பொடி சருமத்தில் உள்ள கொப்புளங்கள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்குவதற்க உதவியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதை பயன்படுத்தலாம். ஒருவேளை ஆண்களும் சோப்பிற்குப் பதிலாக இந்த குளியல் பொடியைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மஞ்சள் சேர்த்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
குளியல் பொடியின் நன்மைகள்:
குளியல் பொடிக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக கஸ்தூரி மஞ்சளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சருமத்தில் உள்ள முகப்பருக்களை நீக்கி ஜொலிப்புடன் வைத்திருக்கிறது. இதே போன்று வேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள நச்சை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் இதில் உள்ள பூலாங்கிழங்கு, கடலை பருப்பு போன்றவை சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மேலும் சூரிய ஒளியால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் இவை தடுக்கின்றன.

![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)

