\
FucherdPsychology

மூளைக்கு பலனளிக்குமா தினசரி 4000 அடிகள் நடப்பது ?

Journal of Alzheimer’s Disease என்ற அறிவியல் இதழில் வெளியாகியிருக்கக் கூடிய ஆய்வு, சிறிய அளவிலான உடற்செயல்பாடு கூட நம் மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும் என நிரூபித்துள்ளது.

நாம் சில ஆயிரம் அடிகள் நடந்தால் கூட, அந்த பயிற்சி நம் மூளையின் அளவு வளர அல்லது சுருங்காமல் இருக்க, நரம்பு மண்டலத்தை பாதுகாக்க, அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் டிமென்ஷியாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.

பொதுவாக நாம் ஆரோக்கியத்துடன் இருக்க ஒவ்வொருவரும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் எனக் கூறப்படும். ஆனால் நம் மூளையின் ஆரோக்கியத்துக்கு 4000 அடி நடப்பதே நேர்மறையாக பலனளிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சராசரியாக 52 வயதுக்கொண்ட 10,125 பேரின் மூளையை ஸ்கேன் செய்து நடத்திய ஆய்வில் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us