\
FucherdHealth

தினமும் நெய் சாப்பிடுவது உடலுக்கு தீங்கா? நன்மையை ?

பழங்காலத்திலிருந்தே இந்திய உணவு பழக்கங்களில் நெய்க்கு முக்கிய இடம் உண்டு.
உணவுகளில் தினமும் ஒரு துளி நெய் சேர்ப்பது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.தினமும் சிறிய அளவு நெய் உட்கொள்வதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்தும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயத்தில் அதிக அளவில் நெய் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். தினமும் நெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊட்டச்சத்து
நெய்யில் ஏ, ஈ மற்றும் டி போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ, குறிப்பாக ஆரோக்கியமான தோல் மற்றும் சவ்வுகளை பராமரிக்க முக்கியமானது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

எடை அதிகரிப்பு
நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவும். நீண்ட நேரம் உங்களை பசியில்லாமல் வைத்திருக்க உதவும்.

நெய்யை அதிகமாக உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கொழுப்பு, கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நெய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்

அஜீரண கோளாறால் பாதிக்கப்படும்போது நெய்யைத் தவிர்க்கவும்
நெய்யில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதால், இது மூத்த குடிமக்களுக்கு இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நெய்யைத் தவிர்க்கவும்.

நெய்யை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும், நன்மைகள் அதிகம் இருந்தாலும் அதிகம் உட்கொள்ளும் பட்சத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us