ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!

இன்றைய சூழலில் மனதும், உடலும் ஆரோக்கியத்துடன் இல்லையென்றால் பல நோய் பாதிப்புகளைத் தொடர்ச்சியாக சந்திக்க நேரிடும். அந்தளவிற்கு ஒவ்வொரு மக்களின் வாழ்க்கையிலும் மன அழுத்தம் என்பது தீராக பிரச்சனையாகிவிட்டது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றால் வாழ்க்கையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இசையைக் கேட்பது மனதிற்கும் உடலுக்கும் வலுச்சேர்க்கும் எனவும், இசை மூளையின் பகுதிகளைச் செயல்படுத்தி மக்களின் கவனத்தையும், நினைவாற்றலையும் கூர்மைப்படுத்துவதாக ஆய்வுகள் பல கூறுகின்றனர். இதோடு மட்டுமின்றி இசை பல்வேறு நன்மைகளையும் மனதிற்கு வழங்குகின்றது. இதோ அவற்றில் சில உங்களுக்காக..
இசையைக் கேட்பதால் கிடைக்கும் நன்மைகள்:
மெலோடிஸ், கானா பாடல்கள், காதல் பாடல்கள், சோக பாடல்கள் என உங்களுக்கு எது பிடித்தமான ஒன்றாக உள்ளதோ? அதை கேட்க முயற்சி செய்யவும். இது மக்களின் மனநலத்தை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
உங்களுக்குப் பிடித்த பாடல்களையோ? அல்லது இசையைக் கேட்கும் போது மக்களின் மூளை மகிழ்ச்சியான ஹார்மோனை வெளியிடுகிறது. எனவே தொடர்ச்சியாக இசையைக் கேட்பதால் மக்களின் மனநிலையில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
இசைக்கும், மன அழுத்தத்திற்கும் நல்ல தொடர்பு உள்ளது. மனம் கஷ்டப்படும் சமயங்களில் தான் நமது கைகள் தானாகவே இசையை கேட்பதற்கு ஆரம்பித்துவிடும். மனம் வேதனைப்படும் நேரத்தில் இசையைக் கேட்கும் போது மன அழுத்த ஹார்மோனானா கார்டிசோலின் அளவைக் குறைக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றனர். அதிலும் வாத்தியங்களை இசைத்து பாடல்களைப் பாடும் போது, கேட்கும் போது மனம் கஷ்டப்படுத்துவதை நிறுத்திவிட்டு சந்தோஷத்திற்கு சென்று விடும்.
மன அழுத்தத்தை எப்படி இசை குறைக்கிறோ? அதே போன்று மன சோர்வையும் இசை குறைக்குமாம். இந்த நேரங்களில் கிளாசிக்கல் இசையைக் கேட்கும் போது தூக்கமின்மை பிரச்சனை தீர்ந்துவிடுவதோடு மனச் சோர்வும் குறைந்துவிடுகிறது.
நாம் எங்காவது நெடுந்தூரங்கள் பயணிக்கும் போது, இசை தான் நம்முடன் பயணிக்கும். பயணத்தின் போது பிடித்த பாடல்களைக் கேட்கும் போது, பயண சோர்வை நீக்குகிறது. மேலும் பயணங்களில் பல இடையூறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு வாகனத்தை முறையாக இயக்குவதற்கும் இசை நமக்கு பயனுள்ளதாக உள்ளது.
பிடித்த பாடல்களை ரேடியோ, தொலைக்காட்சி, மொபைலில் என எதில் கேட்டாலும் நம்மை அறியாமலே முணுமுணுங்கிக் கொண்டே இருப்போம். ஆம் அந்தளவிற்கு இசையை தொடர்ச்சியாக கேட்கும் போது, மக்களுக்கு இசை கற்றலையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும்.
இசையை விரும்பாதவர்கள் கூட, மனதை அமைதியாக்க பிடித்த பாடல்களைக் கேட்பதற்கு முயற்சி செய்வார்கள். அப்புறம் என்ன? இதுபோன்ற பல்வேறு நன்மைகளைப் பெற வேண்டும் என்றால் இசையை கேட்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)

