
இந்தியாவில் சிறப்பான சாலையோர உணவுகள் கிடைக்கும் 5 நகரங்கள் பற்றி பார்க்கலாம்.
அம்ரித்சர்
பஞ்சாப் மாநிலத்தில் பல முக்கிய சுற்றுலாத்தளங்களைக் கொண்டுள்ள அம்ரித்சர் சமையல் கலைக்கும் சிறப்பு பெற்ற நகரமாக இருக்கிறது.தண்ணீர் போல நெய்யை செலவு செய்து சமைக்கும் பஞ்சாப் உணவுகளை நினைக்கும் போதே வாயில் நீர் சுரக்கும்.மிருதுவான சிக்கன் டிக்கா, பருத்த ஷம்மி கெபாப் முதல் அம்ரித்சாரி மீன் வரை அசைவ உணவுகளை வெளுத்து வாங்கலாம்.சைவ உணவுகளும் அம்ரித்சரில் அடிபொளி தான்!
கொல்கத்தா
இந்தியாவின் சமையல் தலைநகரம் என்றால் நாம் கொல்கத்தாவைத் தான் குறிப்பிட வேண்டும். தெருவோர உணவுகளில் பானி பூரி தான் கொல்கத்தாவின் ஸ்பெஷல்.அவர்களது கலாச்சாரத்துடன் கலந்த உணவு பானிபூரி.உருளைக் கிழங்கு, தக்காளி, சுண்டல் பயிறு வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் ஆலி காப்லி, சுர்முர்எல்லாம் தேடித் தேடி சாப்பிட வேண்டிய உணவுகள்.பரபரப்பான தெருக்களில் உலாவி ஆவி பறக்கும் உணவுகளை உண்ணுவது யாருக்குத் தான் பிடிக்காது!
இந்தூர்
இந்தூரின் தெரு உணவுகள் மத்திய பிரதேசம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற பக்கத்து மாநிலங்களில் சுவையையும் தன்னகத்தே வைத்திருக்கும்.
இரவு நேரங்களில் சரஃபா பஜார் போன்ற பரபரப்பான தெருக்களுக்குள் நுழைந்தால் நம் வயிற்றை முழுவதுமாக நிரப்பிக்கொண்டு வரலாம்.டாங்கி கட்டா சமோசாஸ், கோப்ரா பட்டீஸ் முதல் தயிர் படாஸ் வரை இந்தூரின் சிறப்பு உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.நன்றாக வருத்த மல்புவாஸ், பெரிய ஜிலேபி என நிச்சயம் சாப்பிட வேண்டிய ஐட்டங்கள் இந்தூர் முழுவதும் இருப்பதைப் பார்க்கலாம்.
- Explore the Best Canadian Casino Websites
- Link Factory verification
- favorite rest article 664777
- Lorem ipsum dolor sit amet (87563)
- Lorem ipsum dolor sit amet (73375)
டெல்லி
தலை நகராக இருப்பதனால் சில சிறப்பான சாலையோர உணவுகளை வழங்குகிறது டெல்லி. சாட், சோலே பட்டூரே மற்றும் புகழ்பெற்ற பட்டர் சிக்கன் என டெல்லியின் சுவையான உணவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.நிஹாரி, தவுலத் கி சாட், மோத் கச்சோரி மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கேசர் லஸ்ஸி என நிச்சயமாக ஒருமுறையாவது சுவைத்துப்பார்க்க வேண்டிய உணவுகள் ஏராளம் இருக்கின்றன.
டெல்லியின் மூலை முடுக்குகளில் கிடைக்கும் உணவுகள் உங்கள் சுவை உணரிகளை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.
சென்னை
சென்னையின் சாலையோர உணவுகளையும் அவற்றின் சிறப்புகளையும் குறித்து சொல்லித்தெரியவேண்டியதில்லை.உணவுப் பிரியர்கள் எல்லாரும் வாழ்வதற்கு ஒரு நகரம் வேண்டுமென்றால் அதற்கு சென்னை தான் சரியான தேர்வு.சீன உணவுகள், ஐரோப்பிய உணவுகள், பர்மா உணவுகள் எல்லாவற்றையும் சென்னையில் சுவைக்கலாம்.முருக்கு முதல் மொயிங்கா வரை சென்னையில் கிடைக்காத ஸ்ட்ரீட் ஃபுட்டே இல்லை எனலாம்.தமிழ் நாட்டில் சென்னையைத் தவிர மதுரையும் சாலையோர உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர் என்பதை நாம் அறிவோம்!


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
