\
FucherdLife Style

உணவுகளை ஃப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம்?

இன்று எல்லோர் வீட்டிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் என்றால் அது குளிர்சாதன பெட்டி. இது உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க உதவுவதாக நாம் நம்புகிறோம்.ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டு சாப்பிடப்படும் உணவுகளால், வருங்காலத்தில் உடல்நலபாதிப்புகள் ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.நம் வீட்டின் பிரிட்ஜுகளில் சமைத்த, சமைக்கப்படாத உணவுகள் இரண்டையும் வைக்கிறோம். உணவுகள் கெட்டுப்போகக் கூடியவை. எப்படி கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு எக்ஸ்பையரி தேதி இருக்கிறதோ, வீட்டில் சமைத்த உணவுகளுக்கும் இந்த எக்ஸ்பையரி தேதி இருக்கும்.

இந்நிலையில், நம் வீட்டு குளிர்சாதன பெட்டியில் எந்தெந்த உணவுகளை எவ்வளவு நேரம் வைக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

எந்தெந்த உணவுகளை எவ்வளவு நேரம் வைக்கலாம்?
சமைக்கப்படாத உணவுகளை ஒருவாரம் வரையில் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அது தவறு என்கின்றனர்.

சமைக்கப்படாத உணவுகள்

சிக்கன் – 1 முதல் 2 நாட்கள்

மீன் – 1 முதல் 2 நாட்கள்

முட்டை – 3 முதல் 5 வாரங்கள்

அசைவ சூப் மற்றும் ஸ்டூ – 3 முதல் 4 நாட்கள்

பால் – 4 முதல் 7 நாட்கள்

யோகர்ட் – 7 முதல் 14 நாட்கள்

பழ வகைகள் – மூன்று முதல் 5 நாட்கள்

காய்கறிகள் – 7 – 14 நாட்கள்

உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடலாமா?

அதே சமயத்தில் சமைத்த உணவுகளை 3 நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிடுவது ஆபத்தாகும். ஃப்ரிட்ஜில் வைத்து, பின்னர் அதனை சூடுபடுத்தி சாப்பிடும்போது மாறுபட்ட வெப்பநிலை நம் உடல்நலத்தை பாதிக்கிறது.பொதுவாகவே ஒரு முறை சமைத்த உணவை மறுமுறை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 20 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஃப்ரிட்ஜினை ஆபத்தான வெப்பநிலையில் வைத்துள்ளனர் என்று கண்டறியப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us