சோம்பலாக உணருகிறீர்களா? உங்கள் எனர்ஜியை அதிகரிக்க உதவும் 6 உணவுகள்!

தினமும் காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை நாம் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களுடன் என…
இந்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உழைத்து மிகவும் சோர்வாகி விடுகிறோம். இறுதியில் நாம் நமக்காக மேற்கொள்ள நினைக்கும் விஷயங்களை செய்ய உடலில் சுறுசுறுப்பு இல்லாமல் போய்விடுகிறது.
சிலர் எந்த வேலையும் செய்யாமலும் கூட எப்போதும் சோர்வாக இருக்கின்றனர். நிழல் போல சோம்பல் உங்களைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறதென்றால் இது உங்களுக்கான பதிவு தான்.உங்கள் உடலில் இயற்கையாக சுறுசுறுப்பை அதிகரிக்க உதவும் 7 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான ஃப்ருக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ் இருக்கின்றன. இதனால் உடனடியாக எனர்ஜியை பூஸ்ட் செய்ய வாழைப்பழம் சிறந்த உணவாக இருக்கும்.
நம் தசைகள் நன்றாக வேலை செய்ய தேவையான பொட்டாசியமும் வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.
பருப்பு மற்றும் விதைகள்
பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி போன்ற விதைகளில் உடலுக்கு தேவையான கொழுப்புகள் இருக்கின்றன.
பருப்புகள் புரத சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும்.
நட்ஸ் வகைகள் உடலின் ஆற்றலை நிலையாக வைத்திருப்பதுடன் இரத்த சர்க்கரை அளவை சமன் செய்யவும் உதவுகின்றன.
இலைகள் மற்றும் காய்கறிகள்
கீரைகள் மற்றும் கோஸில் மக்னீசியம், இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. இவை உடலில் ஆற்றல் உருவாக முக்கியமான காரணியாக இருக்கின்றன.
உணவை ஆற்றலாக மாற்ற உதவும் பி வைட்டமின்கள் இவற்றில் நிறைந்திருக்கின்றன.
- முகம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணிப்பாருங்க !
- ஆரோக்கியமான மனமும், உடலும் இருக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்
- காலை எழுந்ததும் இந்த விஷயங்களை செய்துப்பாருங்க உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் !
- அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது கோவிலுக்கு செல்லும் நாளில் !
ஓட்ஸ்
ஓட்ஸ் கார்போஹைரேட் நிறைந்த உணவு என்பது நமக்குத் தெரியும். இது நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.
ஓட்ஸில் அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.
க்ரீக் தயிர்
இது புரதச் சத்து நிறைந்த உணவாகும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நிலையான ஆற்றலை வழங்க உதவுகிறது.
இதில் வைட்டமின் பி, கால்சியம் போன்ற ஆற்றலை உருவாக்கத் தேவையான சத்துகள் இருக்கின்றன.
கிரீன் டீ
கிரீன் டீயில் இயற்கையாகவே காஃபின் மற்றும் அண்டிஆக்ஸிடெண்ட்கள் இருக்கின்றன. இது நமது எனர்ஜியை பூஸ்ட் செய்ய உதவும்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
