\
FucherdHealth

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்னைகள் என்னென்ன?

மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆண்களை விட பெண்களை அடிக்கடி பாதிக்கும். பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்கள், ஆண்களை விட மனநல பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பெண்களைப் பாதிக்கும் பொதுவான மனநலப் பிரச்னைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.

மனச்சோர்வு
ஆண்களை விட பெண்களுக்கு மனச்சோர்வு அதிகமாக ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மாதவிடாய், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வின் அறிகுறிகள் ஆண்களிடமிருந்து வேறுபடுகின்றன. திடீர் ஆர்வமின்மை, பாலியல் தூண்டுதல் இல்லாமை, அடிக்கடி அழுகை ஆகிய உணர்வுகள் அவர்களின் மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்கின்றனர்.

கவலை
உலக அளவில் பெண்களைப் பாதிக்கும் பொதுவான மனநலப் பிரச்சினை கவலை. ஆண்களைப் போலல்லாமல், பெண்கள் எல்லா விஷயத்தையும் உள்வாங்கி மைண்டுக்கு எடுத்து சென்று கவலை கொள்கின்றனர்.

பிரசவத்திற்குப் பிறகான மனநிலை
கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்திற்கு பிறகும் சரி பெண்களின் மனநிலை சீரற்றதாக இருக்கும். ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், தூக்கமின்மை மற்றும் தாய்மையின் சவால்கள், உணவுகளின் மாற்றம் போன்றவை பெண்களுக்கு ஒரு விதமான மனநல பிரச்னையாக அமைக்கிறது.

PTSD
பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை சமாளிப்பதால் இளம் வயதிலிருந்தே பெண்கள் PTSDஐ ( Post-traumatic stress disorder ) அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மன உளைச்சலைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக, கைகளை கீறி கொள்ளுதல், தற்கொலை அல்லாத சுய-காய நடத்தைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுவும் ஒரு வகையான மனநல பிரச்னை தான்.

அனைத்து பாலினங்களும் உணர்ச்சி மற்றும் மனநல சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சந்திக்கும் சமூக அழுத்தங்களால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் MG Paper பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us