\
FucherdindiaLife Style

வயநாட்டில் போக பெஸ்ட் டைம் எது தெரியுமா?

கேரளா மாநிலத்தில் இருக்கும் வயநாடு மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. வயநாடுக்கு சென்றால் முக்கியமாக என்ன பார்க்கலாம், செல்வதற்கான பெஸ் சீசன் எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

செம்பரா சிகரம்
சாகச பிரியர்கள் விரும்பும் இடமாக இது உள்ளது. செம்பரா சிகரம் உயரமான சிகரமாக பார்க்கப்படுகிறது. மலையில் உச்சியில் இருந்தால் மொத்த வயநாடும் கண்களுக்கு தெரியும்.

தங்கும் வசதிகள்
வயநாடு மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் தங்குவதற்கு ஏற்ற நிறைய ரிசாட்கள், ஹோட்டல்கள், வீடுகளும் உள்ளன. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல, ஜோடியாக ஹனிமூன் செல்லவும் வயநாடு மிகச் சிறந்த தேர்வு. 5 நாட்கள் இங்கு தங்கி எல்லாவற்றையும் கண்டு ரசித்து விட்டு ஊர் திரும்பலாம்.

பெஸ்ட் டைம்
சுற்றுலா செல்ல பிளான் செய்பவர்கள் அக்டோபர் மாதம் தொடங்கி மே மாதம் வரை செல்லவும். அப்போது தான் வயநாடில் சீசன் தொடங்குகிறது. சிறந்த அனுபவத்தை பெறலாம்.

எடக்கல் குகைகள்
வயநாடு சுற்றுலாவில் கட்டாயம் கண்டு ரசிக்க வேண்டிய இடங்களில் இந்த எடக்கல் குகைகலும் ஒன்று. 7000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகளில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

மீன் முட்டி நீர்வீழ்ச்சி
கேரள மாநிலத்தில் இருக்கும் முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மீன் முட்டி நீர்வீழ்ச்சியை ரசிக்க ஒருநாள் போதாது. குளித்து விளையாடலாம், வகை வகையான உணவுகளை ருசி பார்க்கலாம். புகைப்படமும் எடுக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் MG Paper பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us