\
FucherdHealth

வெண்பூசணி ஜூஸ்இல் இவ்வளவு நன்மையா !

வெண்பூசணியை வைத்து அல்வாவில் தொடங்கி ஜூஸ் வரை பல விதமான ரெசிபிகளை செய்யலாம். இருப்பினும் இதை ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொள்ள விரும்பினால் ஜூஸாக எடுத்துக் கொள்வதே சிறந்தது. வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்
வெண்பூசணியில் 97% நீர் சத்துக்கள் உள்ளன. உடலின் நீர் சத்துக்களை இயற்கையான முறையில் தக்க வைத்துக்கொள்ள இது போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம். கோடை காலம் அல்லது அதிகப்படியான உடல் செயல்படுகளால் நீர் இழப்பு ஏற்படும் பொழுது, உடலின் நீர் சத்துக்களை மீட்டெடுக்க வெண்பூசணி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
வெண்பூசணியில் பொட்டாசியம் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்துகின்றன. வெண்பூசணி ஜூஸை தொடர்ந்து உணவில் சேர்த்து வர இதய ஆரோக்கியமும் மேம்படும்.

உடல் எடையை குறைக்க உதவும்
வெண்பூசணி ஜூஸில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்களும் நீர் சத்தும் உடல் பருமனை குறைக்க ஏற்றவை. இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதனால் அடிக்கடி ஏதாவது உணவு சாப்பிட வேண்டும் என்ற பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். நீர் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த இந்த கலவையானது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
பொதுவாக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் யாவும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. இதில் வெண்பூசணியும் அடங்கும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அஜீரண கோளாறு, மலச்சிக்கல் மற்றும் மூலம் போன்ற பல பல குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வெண்பூசணி ஜூஸ் நன்மை தரும்.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது
நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய வெண்பூசணி, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. வெண்பூசணி ஜூஸ் தாகத்தை தணிக்கவும், அழற்சியை குறைக்கவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us