சின்னச் சின்ன சமையல் டிப்ஸ்!

இட்லி தோசை மாவில் ஐயா கவலைப்படாதீங்க அவை இல்லாமல் வேறு பொருட்களை வைத்து இன்ஸ்டன்ட் சமையல் சமைக்கலாம் ருசிக்கலாம்!
ரவா இட்லி:
வாணலியில் எண்ணெய் இரண்டு கரண்டி விட்டு சூடாக்கி கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு சிறிது நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் முந்திரி துண்டுகள் ஒன்றிரண்டாக பொடித்த மிளகு 5 சேர்த்து வறுத்து ஒரு கப் ரவையை சேர்த்து வறுக்கவும்.
பின்பு அப்பச்சோடா சிறிதளவு இட்லி மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இட்லியாக வார்க்கவும் விருப்பப்பட்டால் துருவிய கேரட்டையும் வேக விடலாம்.
ரோஸ்ட் தோசை:
ஒரு கப் வறுத்த ரவை யோடு இரண்டு கரண்டி கோதுமை மாவு அல்லது மைதா ரவை சேர்த்து மிக்சியில் அரைத்து தயிர் உப்பு சேர்த்து அரைத்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து தோசை பதத்திற்கு தண்ணீர் சேர்த்து தோசை வார்க்கவும். இதனால் உங்களுக்கு கடைகளில் கிடைக்கும் ரோஸ்ட் தோசை போன்று இருக்கும் உங்க வீட்டு தோசை.
மொத் ஊத்தப்பம்:
பழுக்காத ரவை ஒரு கப் மிக்ஸியில் பொடியாக்கவும் மேலும் அரை கப் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து புத்தகமாகவும் திருப்பி போடாமல் மூடி வேக வைக்கவும் துருவிய வெங்காயம் கேரட் கொத்தமல்லி தூவி விடவும் மொத்த என்ற ஊத்தப்பம் ரெடி.
கோதுமை இட்லி:
ஒரு கப் கோதுமை மாவு கால் கப் ரவையை சேர்த்து வாசனை போக வறுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து அரை ஸ்பூன் அப்பச்சோடா இட்லி பதத்திற்கு தண்ணீர் சேர்த்து இட்லி பார்த்தால் மோத் என்ற இட்லி ரெடி.
ராகி தோசை:
நான்கு கப் ராகி மாவு ஒரு கப் உளுந்தை ஊறவைத்து அரைத்து சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைத்து மிக மெல்லிய முறுகலான தோசை வார்க்கலாம்.
இந்த இட்லி தோசை வகைகளுக்கு வெங்காயம் தக்காளி காய்ந்த மிளகாய் அல்லது அரைத்த காரச்சட்னி முழுமையான காம்பினேசன் ஆகும்.



